search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்"

    கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கெர்பர் அரையிறுதிக்கு முன்னேறினார். #Kerber
    இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி போட்டியில் 8-ம் நிலை வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி) - வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் கெர்பர் 7(7)- 6(3), 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரையிறுதி போட்டியில் கெர்பர் - பென்சிக் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். மற்றொரு அரையிறுதியில் ஸ்விடோலினா (உக்ரைன்), ஆன்ட்ரீஸ்கு (கனடா) மோதுகிறார்கள்.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ரயோனிக் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் கெக்மனோவிச்சை (செர்பியா) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.



    மற்றொரு காலிறுதியில் டொமினிக் தியெம் (ஆஸ்திரியா) - மோன்பில்ஸ் (பிரான்ஸ்) மோத இருந்தனர். ஆனால் மோன்பில்ஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் டொமினிக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி அடைந்து வெளியேறினார். #PrajneshGunneswaran #IndianWells #Karlovic
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 89-ம் நிலை இவோ கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். முதல் இரு சுற்றில் முன்னணி வீரர்களை வீழ்த்தி வியப்பூட்டிய குணேஸ்வரன், இந்த சுற்றில் 40 வயதான கார்லோவிச்சிடம் தாக்குப்பிடிக்கவில்லை.

    16 ஏஸ் சர்வீஸ்கள் போட்டு மிரட்டிய கார்லோவிச் 6-3, 7-6 (3) என்ற நேர் செட்டில் குணேஸ்வரனை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 3-வது சுற்று வரை முன்னேறியதன் மூலம் சென்னையைச் சேர்ந்த 29 வயதான குணேஸ்வரனுக்கு ரூ.34 லட்சம் பரிசுத்தொகையும், 45 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.



    மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 3-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவர் ஜான் லினார்ட் ஸ்டிரப்பிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி 4-6, 6-1, 8-10 என்ற செட் கணக்கில் போராடி நோவக் ஜோகோவிச் (செர்பியா)-பாபியோ போக்னினி (இத்தாலி) இணையிடம் வீழ்ந்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் டேனிலி காலின்சை (அமெரிக்கா) விரட்டியடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனை நடாலியா விக்லியான்ட்செவாவை (ரஷியா) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.

    கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சபலென்கா (பெலாரஸ்), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். #PrajneshGunneswaran #IndianWells #Karlovic
    இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் கடும் பேராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #IndianWells
    இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கல்போர்னியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான சிமோனா ஹாலெப், தகுதிச் சுற்றின் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேறிய உக்ரைனின் கட்டேரினா கொஸ்லோவாவை எதிர்கொண்டார்.

    இதில் சிமோனா ஹாலெப்பிற்கு கட்டேரினா கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை-பிரேக்’ வரை சென்றது. கடும் போராட்டத்திற்குப் பின் ஹாலெப் முதல் செட்டை 7(7)-6(3) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டையும் கடும் போராட்டத்திற்குப் பின் 7-5 எனக்கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஹாலெப் காலிறுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் முகுருசாவை எதிர்கொண்டார். இதில் 3-6, 0-1 என செரீனா பின்தங்கிய நிலையில், உடல்நிலை சரியில்லாததால் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் முகுருசா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    ×